ஜவ்வாது மலை பகுதியில் தொடர் மழை: பாம்பாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


ஜவ்வாது மலை பகுதியில் தொடர் மழை:  பாம்பாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

ஜவ்வாது மலை பகுதியில் பெய்த தொடர் மழையால் ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

ஜவ்வாது மலை பகுதியில் பெய்த தொடர் மழையால் ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கனமழை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவ்வாது மலை மற்றும் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாம்பாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையின் காரணமாக ஊத்தங்கரை பகுதியில் 122 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது.

இதனால் பாம்பாறு அணைக்கு வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வருகிறது. தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணை நிரம்பி வருகிறது. இதே போன்று இன்னும் ஒரு வாரம் தொடர்ந்து மழை பெய்தால் பாம்பாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பும் தருவாயில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு பாம்பாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தொடர் மழை காரணமாக ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் அணை முழு கொள்ளளவை எட்டி விடும். இதன் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


Next Story