அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு


அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
x

வால்பாறையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் சோலையாறு அணை நீர்மட்டம் 124 அடியாக உயர்ந்தது.

கோயம்புத்தூர்

வால்பாறை,

வால்பாறையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் சோலையாறு அணை நீர்மட்டம் 124 அடியாக உயர்ந்தது.

அணை நீர்மட்டம் உயர்வு

வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக இரவு, பகலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகின்றது. இதனால் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆறுகள், வனப்பகுதிகளில் உருவாகிய நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் முக்கிய அணையான சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் மின் நிலையங்கள் இயக்கப்பட்டு வருகிறது. மின் உற்பத்திக்கு பின் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கும், கேரளாவிற்கும் திறந்து விடப்பட்டு வருகிறது. சோலையாறு அணையில் இருந்து வினாடிக்கு 848.78 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கனமழை காரணமாக அணைக்கு 2,635 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் 124.50 அடியாக உயர்ந்து உள்ளது.

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி

சோலையாறு அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள், அணையின் இயற்கை அழகை கண்டு ரசித்து வருகின்றனர். வால்பாறை அருகே உள்ள கேரள மாநிலம் சாலக்குடி செல்லும வழியில் உள்ள வனப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகின்றது. இது சுற்றுலா பயணிகளை கவர்ந்து உள்ளது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம்(மில்லி மீட்டரில்) வருமாறு:- மேல்நீரார்-104, கீழ்நீரார்-64, சோலையாறு அணை-60, வால்பாறை-48 பெய்து உள்ளது. 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் 124.50 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் இந்த ஆண்டு சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது.


Next Story