குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு.. குவியும் சுற்றுலா பயணிகள்

கோப்புப்படம்
விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தை நோக்கி குவிந்துள்ளனர்.
தென்காசி,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அனைத்து அருவிகளும் வறண்ட நிலையில் காணப்பட்டது. அத்துடன், கோடை வெயில் வாட்டி வந்ததால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை காணப்பட்டது.
இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து காணப்படுகிறது.
இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தொடர் விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தை நோக்கி சுற்றுலா பயணிகள் அதிகாலை முதலே அதிகளவில் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
Related Tags :
Next Story






