மணிமுக்தாற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு


மணிமுக்தாற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் மணிமுக்தாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கடலூர்

விருத்தாசலம்

வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி நீர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து உற்பத்தியாகி வரும் மணிமுக்தாறு, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வழியாக வந்து பரங்கிப்பேட்டை அருகே வெள்ளாற்றுடன் இணைந்து வங்க கடலில் சங்கமித்து வருகிறது. தற்போது கல்வராயன் மலை பகுதியில் நல்ல மழை பெய்த வருகிறது. இதனால், மணிமுக்தாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

தற்போது நீர் வரத்தானது வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக உள்ளது. இந்த தண்ணீர் விருத்தாசலம் அருகே உள்ள மேமாத்தூர் அணைக்கட்டை வந்தடைந்துள்ளது.

எச்சரிக்கை

தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரிக்குமாயின், நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால், வருவாய்த்துறை அதிகாரிகள் கரையோர கிராமங்களில் ஆற்றுப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே விருத்தாசலம் பகுதியில் பெய்து வரும் மழையால், ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து அதுவும் மணிமுக்தாற்றில் கலந்து வருகிறது.

இதனால் ஆற்றுநீர் செம்மண் நிறத்தில் பாய்ந்தோடுகிறது.

மேலும் வருவாய்த் துறையினர், பொதுப்பணி துறையினர் மூலம் ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை அவ்வப்போது கண்காணித்து பொதுமக்களை எச்சரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story