மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,232 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,232 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணை
கர்நாடக மாநிலத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலை அணைக்கு வினாடிக்கு 177 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
நீர்வரத்து அதிகரிப்பு
இந்த நீர்வரத்தானது நேற்று காலை வினாடிக்கு 3 ஆயிரத்து 343 கன அடியாக அதிகரித்தது. மாலையில் மேலும் அதிகரித்து வினாடிக்கு 10 ஆயிரத்து 232 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் காலை 65.80 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 64.80 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர் வரத்தானது தண்ணீர் திறப்பை விட அதிகரிக்குமானால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.