அணைகளின் நீர்மட்டம் உயர்வு


அணைகளின் நீர்மட்டம் உயர்வு
x

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெய்த மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது

திருநெல்வேலி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெய்த மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.

பரவலாக மழை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், அதன் எல்லை மாவட்டங்களான தென்காசி, நெல்லையிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது.

நாங்குநேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. நேற்று காலை நிலவரப்படி மூைலக்கரைப்பட்டியில் அதிகபட்சமாக 35 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மேலும் நேற்று முன்தினம் நெல்லை மாநகர பகுதிகளில் பெய்த மழையால் ஒரு சில பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்கியது.

நீர்மட்டம் உயர்வு

மழையின் காரணமாக நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.

நேற்று முன்தினம் 66.85 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து நேற்று 71.70 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 4,832 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 867.25 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 95.60 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 73.15 அடியாகவும் உள்ளது.

இதேபோல் தென்காசி மாவட்டம் அடவிநயினார் அணையின் நீர்மட்டமும் அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் 89 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 95 அடியாக உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 81.25 அடியாக இருக்கிறது.

மழை அளவு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

மூைலக்கரைப்பட்டி-35, நாங்குநேரி-26, பாளையங்கோட்டை-10, அம்பை-7, மணிமுத்தாறு-6, ராதாபுரம்-6, நெல்லை- 4, களக்காடு-3, கொடுமுடியாறு-3, அடவிநயினார்-54, குண்டாறு-36, சிவகிரி-9, தென்காசி-8, செங்கோட்டை-8, ஆய்க்குடி-8, ராமநிதி-12, கடனாநதி-7, கருப்பாநதி-6.


Next Story