நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு


நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
x

வாணாபுரம் பகுதிகளில் கனமழை காரணமாக நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை

வாணாபுரம்

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் வாணாபுரம், மழுவம்பட்டு, குங்கிலியநத்தம், சதாகுப்பம், கூடலூர், சேர்ப்பாப்பட்டு, அகரம்பள்ளிப்பட்டு, எடக்கல், பேராயம்பட்டு மற்றும் தென்பெண்ணை ஆற்றுப்பகுதிகள், மலை அடிவாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து ஏரி, குளம், கால்வாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளது.

இதனால் வாணாபுரம், குங்குலியநத்தம், மழுவம்பட்டு உள்ளிட்ட ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இப்பகுதி ஏரிகள் பொதுப்பணித்துறை மற்றும் வட்டார வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாய்களை நேரடியாக ஆய்வு செய்து கால்வாய்களை தூர்வாரி விரைவாக தண்ணீர் ஏரிகளுக்கு கொண்டு செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story