மேட்டூர் அணையில் நீர் திறப்பு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு


மேட்டூர் அணையில் நீர் திறப்பு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
x

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் நீர் திறப்பு 20 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுயுள்ளது.

சேலம்,

கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை பெய்துவரும் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் மொத்த உயரம் 120 அடி ஆகும். அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 15,550 கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு 73, 029 கன அடி நீர் வந்து கொண்டுள்ள நிலையில், நீர் திறப்பு 20 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.


Next Story