ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு


ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
x

வால்பாறையில் தொடர் மழை காரணமாக ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் சோலையாறு அணை நீர்மட்டம் 104 அடியை எட்டியது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் தொடர் மழை காரணமாக ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் சோலையாறு அணை நீர்மட்டம் 104 அடியை எட்டியது.

தொடர் மழை

வால்பாறையில் பகலில் கடுமையான வெயில் வாட்டியபோதும் இரவில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக நடுமலை ஆறு, சோலையாறு சுங்கம் ஆறு, சுற்றுலா தலமான கூழாங்கல் ஆறு ஆகிய ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் சோலையாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நேற்று இரவு 7 மணியில் இருந்து நள்ளிரவு 2 மணி வரை வால்பாறை பகுதி முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் 38-வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குளிக்க அனுமதி இல்லை

இந்த நிலையில் இரவில் பெய்த மழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. வால்பாறை பகுதியின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் கூழாங்கல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் இன்று வால்பாறை பகுதிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் யாரும் ஆற்றில் இறங்கி குளிப்பதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஆற்றில் இறங்கி குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

நீர்மட்டம்

இன்று காலை 6 மணி நிலவரப்படி வால்பாறையில் 15 மி.மீ. மழையும், கீழ்நீராரில் 21 மி.மீ. மழையும், மேல் நீராரில் 48 மி.மீ. மழையும், சோலையாறு அணையில் 21 மி.மீ. மழையும் பெய்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 989 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சோலையாறு அணையின் நீர்மட்டம் 104 அடியை எட்டியுள்ளது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக சோலையாறு அணை தனது முழு கொள்ளளவான 160 அடியை விரைவில் எட்டுவதற்கான சூழல் நிலவுகிறது.


Next Story