காபி விளைச்சல் அதிகரிப்பு


காபி விளைச்சல் அதிகரிப்பு
x

வால்பாறை பகுதியில் காபி விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை பகுதியில் காபி விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காபி சாகுபடி

கோவை மாவட்டம் வால்பாறை மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு தேயிலை, காபி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தகுந்த காலநிலைக்கு ஏற்ப காபி விளைச்சலை கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் வால்பாறை பகுதியில் சமீப காலமாக போதிய அளவில் மழை பெய்தது. மேலும் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெயில் வாட்டியது. இந்த காலநிலை காரணமாக வால்பாறை பகுதியில் பயிரிடப்பட்டுள்ள காபி செடிகளில் காய்கள் காய்க்க தொடங்கி உள்ளது.

அதிகளவில் காய்கள்

இந்த ஆண்டு எதிர்பாராதவிதமாக வால்பாறையில் மிக கனமழை கிடைத்தது. இந்த மழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து தேயிலை தோட்டங்களிலும் பச்சை தேயிலை மகசூல் அதிகளவில் கிடைத்தது. ஏற்கனவே கிடைத்த மழை காரணமாகவும், தற்போது கடுமையான வெயில் அடித்து வருவதாலும் காபி செடிகளில் அதிகளவில் காய்கள் காணப்படுகின்றன.

மகிழ்ச்சி

வழக்கத்திற்கு மாறாக கிடைத்த மழை மற்றும் தற்போது நிலவும் வெயில் காரணமாக இந்த ஆண்டு காபி விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதனால் காபி தோட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் பூத்துக்குலுங்கிய காபி பூக்கள் தற்போது கொத்து கொத்தாக காய்துள்ளது. வால்பாறை பகுதியை பொறுத்தவரை இந்த ஆண்டு கிடைத்த மழை காரணமாக தேயிலை உற்பத்தி மற்றும் காபி உற்பத்தி அதிகரிக்கும் என்றனர்.


Next Story