தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு


தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு
x
தினத்தந்தி 7 Sept 2023 3:00 AM IST (Updated: 7 Sept 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

தேனி

தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சியில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பணியாளர்கள் பிடித்துச் சென்று கருத்தடை அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் அந்த நாய்களுக்கு தடுப்பு ஊசியும் செலுத்தி கட்டுப்படுத்தி வந்தனர். நாய்களுக்கு கருத்தடை செய்வதால் நாய்களின் இனப்பெருக்கம் குறைந்தது. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக நாய்களுக்கு கருத்தடை செய்யப்படாததால் நாய்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. கம்பத்தில் சாலையின் மையப்பகுதியில் நாய்கள் படுத்து கொள்வதால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனம், கார்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் சாலையில் நடந்து செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெருநாய்கள் விரட்டி சென்று கடித்து வருகின்றன. கம்பத்தில் கடந்த சில மாதத்தில் 50-க்கும் மேற்பட்டோர் நாய்கடிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இது குறித்து ஓய்வு பெற்ற நகராட்சி சுகாதாரத்துறை அலுவலரிடம் கேட்டபோது, நோய் வாய்ப்பட்ட நாய்கள் மற்றும் வெறிநாய்களை பிடித்து ஊசி செலுத்தி அழிப்பதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். நாய்களுக்கு கருத்தடை செய்வதால் நாயின் உற்பத்தி எண்ணிக்கை குறையுமே தவிர, ஏற்கனவே அதிகரித்துள்ள நாய்களை கட்டுப்படுத்துவதற்கான வழிகள் இல்லை. நாய்க்கடியால் பெரியளவு உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் நாய்களை பிடித்து அழிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story