கலர் ரக சேலை உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
நூல் விலை உயர்வை கண்டித்து கலர் ரக சேலை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கால வரையற்ற வேைல நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
ராஜபாளையம்
நூல் விலை உயர்வை கண்டித்து கலர் ரக சேலை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கால வரையற்ற வேைல நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
நூல்விலை உயர்வு
ராஜபாளையம் நகர் மற்றும் ஆவரம்பட்டி பகுதிகளில் கலர் ரக பருத்தி சேலை உற்பத்தி செய்யும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்த தறிகளை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
நாள் ஒன்றுக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள 4 ஆயிரம் நூல் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் தினக்கூலியாக ரூ.5 லட்சம் வரை ஊதியம் பெற்று வருகின்றனர். கடந்த ஒரு வருடத்தில் நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டினர்.
போராட்டம்
எனவே நூல் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நேற்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, நூல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கலர் ரக பருத்தி சேலை உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.