நாளை மறுநாள் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்


நாளை மறுநாள் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 12 Jun 2023 6:15 AM IST (Updated: 12 Jun 2023 6:15 AM IST)
t-max-icont-min-icon

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ரேஷன் கடை பணியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மாயவன் தலைமை தாங்கினார். செயலாளர் பெருமாள், பொருளாளர் தன்ராஜ், துணை தலைவர்கள் வேல்முருகன், பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் சிவக்குமார், தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஜெயச்சந்திரராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.

காலவரையற்ற போராட்டம்

பொது விநியோகத் திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும். விற்பனை முனையத்தில் 2 முறை பதிவு செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நாளை மறுநாள்(புதன்கிழமை) முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் ஏழுமலை, அமலா, முன்னாள் நிர்வாகி ஜெகதீஸ்வரி, ராஜகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ரேஷன்கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பணியாளர்கள் அலைக்கழிப்பு

பின்னர் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் நிருபர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் 3 துறைகள் சம்பந்தப்பட்டிருப்பதால் 3 துறையை சேர்ந்த அதிகாரிகள் 20 பேர் ஆய்வு என்ற பெயரில் பணியாளர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே பொதுவினியோக திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க வேண்டும். ஒரே பில்லில் அனைத்து விவரங்களும் வரும் வகையில் மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டும். எடை போட்டு பொருட்களை கடையில் கொடுத்துவிட்டு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது என்றார்.


Next Story