சுதந்திர தின விழா கொண்டாட்டம்


சுதந்திர தின விழா கொண்டாட்டம்
x

ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி பகுதியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் மாவட்ட தி.மு.க.பொறுப்பாளரும் எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் ஒன்றிய குழுத் தலைவர் வெண்மதிமுனிசாமி, நாட்டறம்பள்ளி பேரூராட்சி தலைவர் சசிகலாசூரியகுமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.சிங்காரவேலன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் எஸ்.ராஜா மற்றும் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றினார். சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இனிப்புகளை வழங்கினார். விழாவில் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு செந்தில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டுகள் போலிசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் உயர்நிலைப் பள்ளியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து நடப்பாண்டில் 10-ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தன் தலா 2 கிராம் தங்க நாணயம் வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க கழகம் சார்பாக முதலிடம் பெற்ற மாணவி தேன்கனிக்கு ரூ.10 ஆயிரமும், இரண்டாம் இடம் பிடித்த மாணவி ரித்திகாவுக்கு ரூ.7 ஆயிரத்து 500-ம், மூன்றாம் இடம் பிடித்த பத்மபிரியாவுக்கு ரூ.5 ஆயிரமும் பெற்றோர் சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது

விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சவிதா தேவன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முனிசாமி, துணைத் தலைவர் சக்தி பாண்டியன், பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாட்டறம்பள்ளி பகுதியில் இந்து முன்னணி அமைப்பினர் ஒன்றிய தலைவர் சிங்காரம் தலைமையில் தேசியக்கொடி ஏற்றினர்.


Next Story