அங்கன்வாடி மையத்தில் சுதந்திர தின விழா


அங்கன்வாடி மையத்தில் சுதந்திர தின விழா
x
தினத்தந்தி 15 Aug 2023 12:15 AM IST (Updated: 15 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே அங்கன்வாடி மையத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் யூனியன் சின்னத்தம்பிநாடார்பட்டி அங்கன்வாடி மையத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. யூனியன் தலைவர் காவேரி சீனித்துரை தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மங்களநாயகி, வட்டார ஒருங்கிணைப்பாளர் விநாயகசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை அங்கன்வாடி அமைப்பாளர் சரஸ்வதி செய்திருந்தார்.

இதேபோல் கல்லூரணி குழந்தைகள் நல மையத்திலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மேற்பார்வையாளர் குழந்தை திரேஸ், குழந்தை மைய பணியாளர்கள் சரஸ்வதி, செல்வரத்தினம், உதவியாளர் சுயம்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story