நவ்பல் மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம்


நவ்பல் மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம்
x

நவ்பல் மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் செந்துறை சாலையில் உள்ள நவ்ஃபல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளியின் தாளாளரும், தொழிலதிபருமான ஜி.சிவக்குமார் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி முதல்வர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story