சுதந்திர தின விழா: கோவை தபால் நிலையத்தில் கண்காட்சி


சுதந்திர தின விழா: கோவை தபால் நிலையத்தில் கண்காட்சி
x

சுதந்திர தின விழாவையொட்டி கோவை தபால் நிலையத்தில் கண்காட்சி நடந்தது.

கோயம்புத்தூர்


நாடு முழுவதும் 75-ம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக நாடு பிரிவினையின் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி கோவை தலைமை தபால் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. அனைவரையும் முதன்மை அஞ்சல் அதிகாரி ஆண்டாள் சீனிவாசன் வரவேற்றார். கோவை கோட்ட முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் தலைமை தாங்கி நாடு பிரிவினையின் போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து எடுத்து கூறினார். தொடர்ந்து தேசிய விருது பெற்ற தபால் துறை முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி ஹரிஹரன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களின் வரலாற்று குறிப்புகள், பிரிவினையால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை மாணவ-மாணவிகள், இளம்பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்காட்சியை கண்டு ரசித்தனர்.


Next Story