பேரூராட்சிகளில் சுதந்திர தின விழா


பேரூராட்சிகளில் சுதந்திர தின விழா
x

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

நாமக்கல்

சுதந்திர தின விழா

பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் பேரூராட்சியில் நடைபெற்ற 77- வது சுதந்திர தின விழாவில் பேரூராட்சி தலைவர் கருணாநிதி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். துணைத்தலைவர் அன்பரசு, செயல் அலுவலர் ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ஜெயசேகர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். பாண்டமங்கலம் பேரூராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேரூராட்சி தலைவர் சோமசேகர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். துணைத்தலைவர் முருகவேல், செயல் அலுவலர் திலகராஜ், இளநிலை உதவியாளர் ஜீவானந்தம், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பரமத்தி பேரூராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேரூராட்சி தலைவர் மணி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். துணைத்தலைவர் ரமேஷ்பாபு, செயல் அலுவலர் சுப்ரமணியம், இளநிலை உதவியாளர் அண்ணாதுரை, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். வெங்கரை பேரூராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேரூராட்சி தலைவர் விஜி என்கிற விஜயகுமார், தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். துணைத் தலைவர் ரவீந்தர், செயல் அலுவலர் சீனிவாசன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

எருமப்பட்டி, ராசிபுரம்

எருமப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழாவையொட்டி தேசியக் கொடியை பேரூராட்சி தலைவர் பழனியாண்டி ஏற்றினார். விழாவுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சக்திவேல் முன்னிலை வைத்தார். இதில் வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி இளநிலை உதவியாளர் சுரேஷ் மற்றும் அலுவலக பணியாளர்கள், தூய்மை காவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இதேபோல் நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கி தேசிய க்கொடியை ஏற்றி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். விழாவில் துணைத் தலைவர் காவேரி அம்மாள் பழனிவேல் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story