இன்று சுதந்திர தினவிழா:நாமக்கல் கலெக்டர் அலுவலகம் மின்னொளியில் ஜொலித்தது


இன்று சுதந்திர தினவிழா:நாமக்கல் கலெக்டர் அலுவலகம் மின்னொளியில் ஜொலித்தது
x
தினத்தந்தி 15 Aug 2023 12:30 AM IST (Updated: 15 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் விழாவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சரியாக 9.05 மணிக்கு கலெக்டர் உமா தேசியக்கொடி ஏற்றுகிறார்.

பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளும் அவர், சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்க உள்ளார். தொடர்ந்து அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். பின்னர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று அங்கு போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். மேலும் விழா நடைபெற உள்ள மைதானத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே நேற்று இரவு சுதந்திர தினத்தையொட்டி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மின்னொளியில் ஜொலித்தது

1 More update

Next Story