சென்னை காமராஜர் சாலையில் சுதந்திர தினவிழா: ஒத்திகை நிகழ்ச்சி..!


சென்னை காமராஜர் சாலையில் சுதந்திர தினவிழா: ஒத்திகை நிகழ்ச்சி..!
x
தினத்தந்தி 4 Aug 2023 9:48 AM IST (Updated: 4 Aug 2023 10:49 AM IST)
t-max-icont-min-icon

சென்னை காமராஜர் சாலையில் சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை,

சுதந்திர தினவிழா வரும் 15-ந்தேதி சென்னை கோட்டையில் நடைபெறுகிறது. சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றுகிறார்.

இதையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை), தலைமை செயலகம் அமைந்துள்ள காமராஜர் சாலையில் சுதந்திர தின விழாவின் முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

வாகன அணிவகுப்புடன் முதல்-அமைச்சரை அவரது இல்லத்திலிருந்து அழைத்து வருவது போல ஒத்திகை நடைபெற்றது. கமாண்டோ படை, குதிரைப்படை, பெண் காவல் படை உள்ளிட்ட 7 படை பிரிவுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆகஸ்டு 10, 13 ஆகிய நாள்களில் விருது வழங்கும் நிகழ்ச்சிகளின் ஒத்திகை நடைபெறவுள்ளது.

ஒத்திகை நடைபெறும் நாள்களில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை ராஜாஜி சாலையிலும், காமராஜர் சாலையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நேப்பியர் பாலத்திலிருந்து போர் நினைவுச் சின்னம் வரை காமராஜர் சாலையிலும், போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப் பெற்ற ராஜாஜி சாலையிலும், கொடிமரச் சாலையிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.


Next Story