சுதந்திர தினம்: சென்னையில் மட்டும் 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு


சுதந்திர தினம்: சென்னையில் மட்டும் 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
x

கோப்புப் படம்

தினத்தந்தி 13 Aug 2023 4:02 AM GMT (Updated: 13 Aug 2023 5:37 AM GMT)

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் மட்டும் 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை,

நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியேற்றுகிறார். சுதந்திர தினத்தன்று நடைபெறும் அணிவகுப்புக்கான ஒத்திகையும் இன்று காமராஜர் சாலையில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் மட்டும் 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தீவிர பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். தனியார் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய சாலைகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story