இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது - அமைச்சர் ரகுபதி பேட்டி


இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது - அமைச்சர் ரகுபதி பேட்டி
x

இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

நாகை,

நாகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பு அணி நிர்வாகிகள் கூட்டம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது 2024 நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது குறித்து அமைச்சர் கட்சி நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்து ஆலோசனைகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ரகுபதி கூறியதாவதுள்:-

இந்தியா கூட்டணி அமைப்பதற்கு முன்பாகவே பாஜக அரசு நீக்கப்பட வேண்டும் என்று முழக்கம் எழுப்பியவர் முதல்-அமைச்ச மு.க.ஸ்டாலின். தற்போது இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ஜனநாயக நாட்டில் நினைத்ததை எல்லாம் செய்து கொண்டிருக்கும் மத்திய அரசிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜக அரசால் மாற்றப்பட்ட சட்டங்களின் பெயர்கள் மீண்டும் கொண்டுவரப்படும்.

தற்போதுள்ள சிறப்பான சட்டங்களை மாற்றக்கூடாது என அகில இந்திய அளவிலான வழக்கறிஞர்கள், மூத்த நீதியரசர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.காலை உணவு திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. என்று கூறினார்.


Next Story