இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் 'நீட்' தேர்வு இருக்காது


இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் நீட் தேர்வு இருக்காது
x

இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் ‘நீட்’ தேர்வு இருக்காது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி

திருப்பூர்

திருப்பூர்

நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் 'நீட்' தேர்வு இருக்காது என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார். திருப்பூரில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாதிப்பு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசால் மருத்துவ கல்லூரிகளுக்கு 'நீட்' தேர்வு திணிக்கப்பட்டிருக்கிறது. இந்த தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக ஏழை-எளிய, கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். ஆனால் ஒன்றிய அரசு அதை சிறிதும் சிந்திக்காமல் அக்கறை இல்லாமல் இருக்கின்றனர்.

ஆண்டுதோறும் கஷ்டப்பட்டு படித்து பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை மாணவர்கள் பெறுகின்றனர்.

ஆனால் 'நீட்' தேர்வில் கடினமான கேள்விகளை கேட்கும்போது, தனியார் பள்ளிகளில் படிக்கும் வசதி படைத்த மாணவர்களுக்கு தேர்வு எளிதாக இருக்கும். ஆனால் கிராமப்புறங்களில் உள்ள ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அதை எதிர்கொள்ள முடியாமல் திணறுகின்றனர்.

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது பொதுத்தேர்வுக்கு முன்பு இருந்த நுழைவுத் தேர்வையே அவர் ரத்து செய்தார். தமிழகத்தில் உலக பிரசித்தி பெற்ற மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் எந்த 'நீட்' தேர்வை வைத்து இந்த இடத்தை பிடித்துள்ளனர். உயர் வகுப்பை சார்ந்தவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பை படிப்பதற்கான வாய்ப்பை 'நீட்' தேர்வு மூலமாக ஒன்றிய அரசு ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா கூட்டணி

எனவே 'நீட்' தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதே தி.மு.க.வின் கோரிக்கை. இதில் எந்த அரசியலும் கிடையாது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். மத்தியில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதன் பிறகு 'நீட்' தேர்வு இருக்காது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

--------------------


Next Story