"இந்தியா, பாரத் என்பதை வேறு வேறாக பார்க்க வேண்டியதில்லை" - த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன்
இந்தியா, பாரத் என்பதை வேறு வேறாக பார்க்க வேண்டியதில்லை என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சேலம்,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;
"வாழ்க்கை முறையை எப்படி அமைத்து கொள்கிறோம் என்பதை பற்றியதுதான் சனாதனம். திமுகவை பொறுத்தவரை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தனிப்பட்ட வாக்கு வங்கிக்காக சனாதானத்தை பற்றி குறிப்பிட்ட மதத்தை பற்றி பேசுவதை மக்கள் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
இந்தியா, பாரத் என்பது அம்பேத்கர் இயற்றிய சட்டத்திலேயே உள்ளது. இந்தியா, பாரத் என்பதை வேறு வேறாக பார்க்க வேண்டியதில்லை. அரசியல் காரணங்களுக்காக அரசியல் கட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம். இந்தியா கூட்டணி முரண்பாட்டின் மொத்த வடிவமாக உள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story