'இந்தியா என்ற வார்த்தை நமது ரத்தத்தில் கலந்துள்ளது; அதை மாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது' - பிரேமலதா விஜயகாந்த்
இந்தியாவின் பெயரை மாற்றுவது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
மாயிலாடுதுறை,
இந்தியா என்ற பெயரை மாற்றுவதாக கூறுவது கண்டிக்கத்தக்கது என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
இது குறித்து மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது;-
"இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவது தவறான முன்னுதாரணமாகிவிடும். ஏனெனில் 75 ஆண்டு காலமாக இந்தியா என்ற வார்த்தை நம் ஒவ்வொருவரின் மனதிலும், ரத்தத்திலும் கலந்துள்ளது. ஒரு குழந்தைக்கு ஒரு பெயரை வைத்துவிட்டு, 2 வருடங்கள் கழித்து வேறு பெயரால் அழைத்தால் அந்த குழந்தை திரும்பிக்கூட பார்க்காது. இந்த நிலையில் ஒரு நாட்டின் பெயரை அவ்வளவு சுலபமாக மாற்றுவோம் என்று கூறுவது நிச்சயமாக கண்டிக்கத்தக்கது."
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
Related Tags :
Next Story