இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஆண்டு விழா


இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஆண்டு விழா
x

திருப்பத்தூரில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஆண்டு விழா நடைபெற்றது.

திருப்பத்தூர்

அஞ்சல் துறையின்கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் திருப்பத்தூர் கிளையின் 5-வது ஆண்டு விழா நடைபெற்றது. திருப்பத்தூர் தலைமை அஞ்சல் அலுவலர் கணேசன், திருப்பத்தூர் உட்கோட்ட ஆய்வாளர் அபிஜித்குமார்வர்மா, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் திருப்பத்தூர் கிளை மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருப்பத்தூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மாதேஸ்வரன் தலைமை தாங்கி பேசியதாவது:-

இந்த வங்கியில் சேமிப்பு கணக்கை தொடங்குவதன் மூலம் மத்திய, மாநில அரசின் அனைத்து மானியங்களை நேரடி பலன் பரிமாற்றங்களின்கீழ் பெறலாம். இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ரூ.399-க்கு விபத்து காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் விபத்தினால் ஏற்படும் இழப்புகளுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு பெற முடியும் என்றார்.

இதில் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story