இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கால்வாய் தூர்வாரும் பணியை தொடங்க கோரி இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

திருப்புல்லாணி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் எக்ககுடி, பக்கிரி புதுக்குளம், கொத்தங்குளம் பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் வந்தனர். இவர்கள் இந்திய கம்யூனிஸ்டு திருப்புல்லாணி ஒன்றிய பொருளாளர் ராஜீவ்காந்தி தலைமையில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கருணாநிதி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சண்முகராஜா, ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம், கிராம விவசாயிகள் சங்க தலைவர்கள் ஹாஜாமுகைதீன், சகுபர்சாதிக் உள்பட ஏராளமானோர் திரளாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எட்டிவயல் கழுங்கு வழியாக வரும் நீர்வரத்து கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் தூர்ந்து போய் தண்ணீர் வரமுடியாத நிலையில் உள்ளது. இதனால் எக்ககுடி, பக்கிரி புதுக்குளம், கொத்தங்குளம் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லாமல் வறட்சி நிலவுகிறது. மேற்கண்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக விவசாயம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து வருகிறோம். இந்த எட்டிவயல் கால்வாயை தூர்வார நீண்டகாலம் போராடி தற்போது அனுமதி கிடைத்துள்ளது. ஆனால், டெண்டர் விடப்பட்டு பணி ஆணை வழங்கியும் இதுவரை பணிகளை தொடங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் இனியும் காலம் தாழ்த்தினால் மழையால் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும். எனவே, மழைக்கு முன்னர் கால்வாயை தூர்வாரி மேற்கண்ட கண்மாய்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.


Related Tags :
Next Story