இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
முதியோர் ஓய்வூதியம் நிறுத்தியதை கண்டித்து ராமநாதபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம்,
தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியம் பல பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால் முதியோர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுபோன்று ஏராளமானோர் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முதியோர் ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து முழக்கங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story