மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு மறியல்


மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு மறியல்
x
தினத்தந்தி 15 Sept 2023 12:15 AM IST (Updated: 15 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் வீரராஜ், சிவராமன், மாவட்ட துணைச்செயலாளர் ராமன், ஒன்றிய செயலாளர் நீதி சோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும், மணிப்பூர் இன கலவரம் பாலியல் வன்கொடுமை செய்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் ஜெய சக்திவேல், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பிரபாகரன், கட்சி நிர்வாகிகள் வக்கீல் சுந்தரய்யா, பேரூராட்சி மன்ற உறுப்பினர் வித்யா தேவி, ஜெயக்குமார், பாஸ்கரன், தியாகராஜன், தேவகி உள்ளிட்ட 108 பேரை சீர்காழி போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story