இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு


இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு
x
தினத்தந்தி 4 July 2022 12:30 AM IST (Updated: 4 July 2022 12:34 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு நடந்தது.

நாமக்கல்

குமாரபாளையம்:-

பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க 5-வது மாநாடு வெப்படை செங்குந்தர் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. ஒன்றிய தலைவர் எம்.செந்தில் தலைமை தாங்கி மாநாட்டு கொடியை ஏற்றினார். கிளை செயலாளர் ராஜ்தேவ் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் மு.மணிகண்டன் சங்க அறிக்கை வாசித்தார். மாநாட்டில் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் இ.கோவிந்தராஜ், வாலிபர் சங்க மாநில குழு உறுப்பினர் எம்.கற்பகம் ஆகியோர் பேசினர்.

மாநாட்டில் ஒன்றிய தலைவராக கவின்ராஜ், செயலாளராக ராஜ்தேவ், பொருளாளராக செல்லப்பன், துணைத்தலைவராக குணசேகர், துணைச் செயலாளராக அமிர்தராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதுதவிர 15 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.

மாநாட்டில் வெப்படையில் ஐ.டி.ஐ. கல்லூரி அமைக்க வேண்டும். வெப்படை நால்ரோடு பஸ் நிறுத்த பகுதியில் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். அனைத்து ஊராட்சி, பேரூராட்சிகளிலும் விளையாட்டு மைதானம் மற்றும் உபகரணங்கள் வழங்கிட வேண்டும். இ.காட்டுர் குடியிருப்பு பகுதிகளில் முறையான சாக்கடை கால்வாய் வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிளை செயலாளர் நவீன் நன்றி கூறினார்.


Next Story