இந்திய மாணவர்களால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும்


இந்திய மாணவர்களால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும்
x

இந்திய மாணவர்களால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்று ஸ்ரீ ஈஸ்வர் கல்லூரியில் நடந்த ஹேக்கத்தான் போட்டியில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பேசினார்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

இந்திய மாணவர்களால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்று ஸ்ரீ ஈஸ்வர் கல்லூரியில் நடந்த ஹேக்கத்தான் போட்டியில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி கலந்துரையாடல்

கோவையை அடுத்த கிணத்துக்கடவு ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் மத்திய அரசின் சார்பில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத் தான் என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான 36 மணி நேர மென்பொருள் வடிவமைக்கும் போட்டி நேற்று தொடங்கியது.

இதில், மாற்றுத் திறனாளிகள் அன்றாடம் சந்திக்கும் 6 பிரச்சி னைகள், மத்திய அரசின் சமூக நீதித்துறையால் பட்டியலிடப் பட்டு அவற்றுக்கான மென்பொருள் தீர்வு வழங்க மாணவர் குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த போட்டி தொடக்க விழா, புதுடெல்லியில் இருந்து காணொலி மூலம் நடத்தப்பட்டது. இதில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார்.

இதில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் கலந்து கொண்ட ஜம்மு காஷ்மீர், உத்தரபிரதேசம், மராட்டியம், பீஹார் உள்பட பல்வேறு மாநில மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

தீர்வு காண முடியும்

இதையொட்டி ஸ்ரீ ஈஸ்வரர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப் பட்டு இருந்த அகன்ற திரையில் தோன்றி பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது, மாணவர்களின் உற்சாகமும், உத்வேகமும் ஒரு நாட்டின் வெற்றிக்கு இன்றியமையாதது.

நாட்டின் முக்கிய பணிகள் பல டிஜிட்டல் தொழில்நுட்ப மயமாக்கப்படும். அது பெரிய அளவில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது. உலகத்தில் இன்று நிலவும் வரும் எந்த பிரச்சினைகளுக்கு இந்திய மாணவர்களால் தீர்வு காண முடியும் என்றார்.

இதில், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழக பிரதிநிதியாக அபிஜித் கண்ட்காலே, ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி தலைவர் ஆர்.மோகன்ராம், கல்லூரி இயக்குனர் ஆர்.ராஜாராம், கல்லூரி முதல்வர் சுதமோகன் ராம், ஆராய்ச்சித்துறை டீன் கருப்புசாமி, தொழில்துறை நல்லுறவு டீன் கண்ணன் நரசிம்மன், அகடெமிக்ஸ் டீன் நிர்மலா, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story