இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட்டம்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
x

மேல்விஷாரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட பொதுக்குழு கூட்டம் மேல்விஷாரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு எச்.முகமது உசேன் தலைமை தாங்கினார். எம்.எம்.முன்னா வரவேற்றார். கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், தமிழ்நாடு பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜகான், இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் அன்சார் மதர், எஸ்.எச்.முகமது அர்ஷத், மாவட்ட பொறுப்பாளர் முகமது நஹிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாநில கவுரவ தலைவராக மலக் முஹமது ஷாகபுதீன், மாவட்ட கவுரவ தலைவர்களாக கே.சான் பாஷா, அப்துல் அஜீஸ், மாவட்ட தலைவராக மலக் முகமது காலித், செயலாளராக சேக் காதர்பாஷா, பொருளாளராக சையது அஜ்மல், மாவட்ட இளைஞரணி தலைவராக மேல்விஷாரம் எச்.முகமது உசேன், செயலாளராக முஸ்தபா ஜிலானி, பொருளாளராக முஹமது அமீன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆயுள் தண்டனை பெற்றுள்ள முஸ்லிம் சிறைவாசிகளை தமிழக அரசு விடுதலை செய்யவேண்டும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் கூட்டணி கட்சி வெற்றிக்கு பாடுபடுவது, இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றம் செய்வதற்கும், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தும் முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story