மானாமதுரையில் சுதந்திரதின விழா


மானாமதுரையில் சுதந்திரதின விழா
x

மானாமதுரையில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.

சிவகங்கை

மானாமதுரை,

75-வது சுதந்திர தினத்தையொட்டி மானாமதுரை எம்.எல்.ஏ. அலுவலகத்தில் எம்.எல்.ஏ. தமிழரசி தேசிய கொடி ஏற்றினார். மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி கொடி ஏற்றினார். துணை தலைவர் பாலசுந்தரம், கமிஷனர் கண்ணன், நகராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர் பங்கேற்றனர். மானாமதுரை யூனியன் அலுவல கத்தில் யூனியன் தலைவர் லதா அண்ணாத்துரை கொடி ஏற்றினார். துணை தலைவர் முத்துச்சாமி, வட்டார வளர்ச்சி அதிகாரி ரஜினிதேவி, யூனியன் கவுன்சிலர்கள், மேலாளர் தவமணி ஆகியோர் கலந்து கொண்டனர். மானாமதுரை குட்வில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் பூமி நாதன் கொடி ஏற்றினார். ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ அதிகாரி கணேசபாண்டியன், பள்ளி முதல்வர் அருள் ஜோசபின் பெட்சி, மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story