சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள ஏ.வி.பி.டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் திருப்பூர் ஐ பவுண்டேசன் டாக்டர் ஜே.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சுதந்திர இந்தியாவில் நம் அனைவரின் கடமைகளும், பொறுப்புகளும் என்ற தலைப்பில் பேசினார். ஏ.வி.பி.கல்விக்குழுமங்களின் பொருளாளர் லதாகார்த்திகேயன் முன்னிலை வகித்தார். தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி பேசினார்.ஏ.வி.பி.டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ஜி.பிரமோதினி வரவேற்றார். ஏ.வி.பி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் எல்.டயானா நன்றி கூறினார்.
ஏ.வி.பி.பூண்டி பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பிரியாராஜா வரவேற்றார். கண் டாக்டர் ஜே.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முடிவில் பள்ளி ஒருங்கிணைப்பாளர் அபிதாபானு நன்றி கூறினார்.
திருப்பூர் திருமுருகன்பூண்டியில் அமைந்்துள்ள ஏ.வி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த விழாவிற்கு ஏ.வி.பி.கல்விக்குழுமங்களின் தலைவர் ஏ.கார்த்திகேயன் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார்.ஏ.வி.பி.கல்லூரி முதல்வர் வி.கதிரேசன் வரவேற்றார். டாக்டர் ஜே.ரவி சிறப்பு விருந்தினராக தேசிய கொடியேற்றி சுதந்திர தினம் பற்றி பேசினார். கல்லூரி நிர்வாக அலுவலர் எஸ்.அசோக்குமார் நன்றி கூறினார்.
திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி.டிரஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் டாக்டர் ஜே.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பள்ளி தாளாளர் ஏ.கார்த்திகேயன், லதாகார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். பள்ளி முதல்வர் எல்.டயானா, ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.