லால்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள்-உளுந்து மறைமுக ஏலம்


லால்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள்-உளுந்து மறைமுக ஏலம்
x

லால்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள்-உளுந்து மறைமுக ஏலம் நடைபெறுகிறது.

திருச்சி

லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலாளர் சுரேஷ்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- திருச்சி மாவட்டத்தில் விற்பனை குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வருகிற 24-ந் தேதி முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் எள் மற்றும் உளுந்து மறைமுக ஏலம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் மற்றும் எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதனால் விவசாயிகள் தங்களின் விளை பொருட்களின் தரத்திற்கு ஏற்ற உரிய விலையை பெற்று பயனடையலாம். மறைமுக ஏலத்திற்கு வைக்கப்படும் விளை பொருட்களை நன்கு உலர வைத்து அயல்பொருட்கள் ஏதும் இன்றி சுத்தம் செய்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்து தரத்திற்கு ஏற்ற நல்ல விலைக்கு விற்று பயன்பெறலாம். விவசாயிகள் அறுவடை செய்த வேளாண் விளைபொருட்களை உலர்த்திக்கொள்ள உலர் கள வசதியும், அப்பொருளை அதிகபட்சமாக ஆறுமாத காலம் வரை வாடகைக்கு இருப்பு வைத்துக்கொள்ள நவீன சேமிப்பு கிட்டங்கி வசதியும், பொருளீட்டுக்கடன் பெறும் வசதியும் உள்ளது. எனவே லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள வசதிகள் அனைத்தையும் விவசாயிகள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மேற்பார்வையாளர் விவேக்கை 9489477173 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Next Story