தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும்அகில இந்திய தொழிற்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் :18-ந்தேதி கடைசி நாள்


தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும்அகில இந்திய தொழிற்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் :18-ந்தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 15 Sept 2023 12:15 AM IST (Updated: 15 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வை எழுத தனித்தேர்வர்கள் வருகிற 18-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி


இதுகுறித்து கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-


கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்துகொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் 18.9.2023 அன்று 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். வயது உச்ச வரம்பு இல்லை.

தொழிற்பழகுனர் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் தொழிற்சாலை சட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் அரசு, உள்ளாட்சி மன்றத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழிற்பிரிவு தொடர்பான பணியில் 3 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஆகஸ்டு 2019-ம் ஆண்டு முதல் சேர்க்கை செய்யப்பட்டு மாநில தொழிற்பயிற்சி குழுமம் தொழிற்பிரிவு பயின்று தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தனித்தேர்வராக விண்ணப்பித்து முதன்மைத்தேர்வு இன்றி நேரடியாக அகில இந்திய தொழிற்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

செய்முறை தேர்வு

மேலும், தனித்தேர்வராக தேர்வெழுத விரும்பும் விண்ணப்பதாரர் நிலையத்திலுள்ள அத்தொழிற் பிரிவிற்குரிய குறைந்த பட்ச கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதல்நிலைத் தேர்வுகள் கருத்தியல் பாடத்தில் தேர்வு 10.10.2023 மற்றும் செய்முறை தேர்வு 11.10.2023 ஆகிய தேதிகளில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் இத்துறையால் நடத்தப்படும்

கருத்தியல் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே செய்முறை தேர்வில் கலந்து கொள்ள இயலும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் வருகிற 2024 ஜூலை மாதம் நடைபெறவுள்ள அகில இந்திய தொழிற் தேர்வில் தனித்தேர்வராக கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்வு கட்டணம்

தொழிற் பிரிவிற்கு ஏற்ப அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு தேசிய தொழிற் சான்றிதழ் வழங்கப்படும். தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பபடிவம் மற்றும் முழு விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு ஆகியவற்றை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.

அதற்கான தேர்வு கட்டணத்தை ரூ.200 www. Karuvoolam.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாகவோ அல்லது தமிழக அரசின் கருவூலம், பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலக் கிளை வழியாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைய வழியாக தேர்வு கட்டணம் செலுத்தியமைக்கான செலுத்துச்சீட்டு, கல்விச் சான்றிதழ் நகல் மற்றும் இதர ஆவணங்களின் நகல்கள் ஆகியவற்றை இணைத்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கிண்டி, செங்கல்பட்டு, திருச்சி, அரியலூர், கடலூர், உளுந்தூர்பேட்டை, திண்டிவனம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர்களிடம் வருகிற 18.-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


Next Story