ஐ.என்.டி.யு.சி. ஆண்டு விழா


ஐ.என்.டி.யு.சி. ஆண்டு விழா
x

நெல்லையில் ஐ.என்.டி.யு.சி. ஆண்டு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி

நெல்லை கொக்கிரகுளம் தனியார் மண்டபத்தில் அகில இந்திய ஐ.என்.டி.யு.சி. 75-வது ஆண்டு விழா, நெல்லை அரசு போக்குவரத்து கழக ஐ.என்.டி.யு.சி. 48-வது ஆண்டு விழா, சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பிறந்த நாள் விழா, அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் பணிநிறைவு மணிவிழா, இல்லத்தரசிகளுக்கு நன்றி கூறும் விழா ஆகிய ஐம்பெரும் விழா நடந்தது.

ஐ.என்.டி.யு.சி. நெல்லை அரசு போக்குவரத்து கழக பேரவை பொதுச்செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். தலைவர் முருகராஜன், பொதுச்செயலாளர் மகாராஜன், ஐ.என்.டி.யு.சி. ஓய்வுபெற்றோர் நலச்சங்க கவுரவ தலைவர் கந்தையா, செயலாளர் சந்திரன், பொருளாளர் வின்சென்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்.பி. ராமசுப்பு ஆகியோர் பேசினர். காங்கிரஸ் மாநில செயலாளர் செல்வராஜ், ஐ.என்.டி.யு.சி. தமிழ்நாடு தலைவர் ஜெகநாதன், செயல் தலைவர் கதிர்வேல், அமைப்பு செயலாளர் பெருமாள்சாமி, நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், தென்காசி மாவட்ட பொருளாளர் முரளிராஜா, சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளிமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story