வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து விலகுவதாக ஐ.என்.டி.யு.சி. அறிவிப்பு


வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து விலகுவதாக ஐ.என்.டி.யு.சி. அறிவிப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 8 Jan 2024 10:28 PM IST (Updated: 9 Jan 2024 12:24 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் பாதிக்கக் கூடாது என்ற நோக்கில் வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து விலகுகிறோம் என்று ஐ.என்.டி.யு.சி. அறிவித்துள்ளது.

சென்னை,

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தப்படி அரசுடன் நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் இன்று நள்ளிரவு 12 மணி, அதாவது அதிகாலை 12 மணியுடன் வேலை நிறுத்தம் தொடங்குகிறது. இதனால், நாளை பஸ்கள் சேவை பெருமளவு பாதிக்கப்படும் என்று பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

பஸ் சேவை வழக்கம் போல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. இந்த நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து விலகுவதாக ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. "மக்கள் பாதிக்கக் கூடாது என்ற நோக்கில் வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து விலகுகிறோம். பயணிகளுக்கு சிரமம் இன்றி பேருந்துகளை இயக்க வேண்டும்" என்று இந்திய தேசிய போக்குவரத்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story