தொழில் உரிம கட்டணம் நிர்ணயிக்க தொழில்துறை, வியாபாரிகள் எதிர்ப்பு


தொழில் உரிம கட்டணம் நிர்ணயிக்க  தொழில்துறை, வியாபாரிகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 15 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகராட்சி பகுதியில் தொழில் உரிமம் கட்டணம் நிர்ணயம் செய்ய தொழில் துறையினர், வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்
ஆர்.எஸ்.புரம்


கோவை மாநகராட்சி பகுதியில் தொழில் உரிமம் கட்டணம் நிர்ணயம் செய்ய தொழில் துறையினர், வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


ஆலோசனை கூட்டம்


தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 மற்றும் விதி 2023-ன் படி தொழில் உரிமம் கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், வியாபாரிகள், வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி கலையரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி துணை ஆணையாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.


கூட்டத்தில் இந்திய தொழில்வர்த்தக சபை, தொழில் அமைப்பு களின் கூட்டமைப்பு, வியாபாாிகள் சங்கங்கள் உள்ளிட்ட அமைப் புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் தொழில் உரிமம் கட்டணம் நிர்ணயம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள், தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்துகளை பதிவு செய்தனர்.


கூட்டத்தில் கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (போசியா) ஒருங்கிணையாளர் ஜெ.ஜேம்ஸ் கூறியதாவது:-


தொழில்நடத்த முடியவில்லை


கோவை மாநகராட்சியில் 250 சதவீதம் சொத்து வரி உயர்த்தப ்பட்டு உள்ளது. மேலும் தற்போது மின்கட்டணம் மற்றும் நிலைக் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

கோவை மாநகரில் வாடகை மற்றும் சொந்த கட்டிடங்களில் தொழில் நடத்துவோர் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

மேலும் கடந்த 7 ஆண்டுகளாகவே தொழில்களில் ஏற்பட்டு உள்ள ஜி.எஸ்.டி. வரி, மூலப்பொருட்க ளின் விலை உயர்வு, கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக தொழில்முடக்கம், ஜாப் ஆடர்கள் இல்லாத மந்தநிலை உள்ளது.


மேலும் தற்போது மாநகராட்சியால் உயர்த்தப்பட்டு உள்ள சொத்து வரி, மின்கட்டண உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளோம். இந்த நிலையில் தொழில் வரி மற்றும் ரன்னிங் லைசன்ஸ் என்று தனியாக வரிவிதிப்பது எங்களுக்கு மேலும் சுமையாகி விடும். தொழில் நடத்தவும் முடியவில்லை.


நெருக்கடி தரக் கூடாது


எனவே மாநகராட்சியில் இயங்கி வரும் குறுந்தொழில் கூடங்க ளுக்கு தொழில் வரி, தொழில் உரிமம் எடுக்க வேண்டும் என்ப தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

சிறு தொழில் முனை வோரை பொறுத்தமட்டில் ஆண்டுக்கு ஒரு முறை பெற அறிவு றுத்தும் தொழில் உரிமத்திற்கான வரி விதிப்பை தொழில் நிலை யை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச வரியை தீர்மானிக்க வேண் டும்.

அதுவரை கோவை மாநகரில் நடத்தும் தொழில் கூடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் நெருக்கடி கொடுக்க கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.


இதுகுறித்து மாமன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்று துணை ஆணையாளர் சிவக்குமார் தெரிவித்தாக தொழில்அமைப்பினர் கூறினர்.


Next Story