மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா
பாளையம்புதூர் அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.
தர்மபுரி
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரைசாமி, நிர்வாகிகள் முத்துவேல், குணசேகரன், ராசப்பன், வையாபுரி, மணிகண்டன், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்ரமணி ஆகியோர் கலந்து கொண்டு, 130 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சண்முகம், பா.ம.க. நிர்வாகிகள் சண்முகம், பெரியசாமி, ஒன்றிய கவுன்சிலர் காமராஜ், ஊராட்சி மன்ற துணை தலைவர் விஜயராகவன், தி.மு.க. உறுப்பினர் பெரியண்ணன், ராமச்சந்திரன் உள்பட ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story