1,842 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 1,842 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 1,842 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கப்பட்டது.
விலையில்லா சைக்கிள்
ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. நவாஸ்கனி எம்.பி., ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:- தமிழக அரசின் இத்திட்டம் மூலம் கிராம பகுதியில் இருந்து மாணவ, மாணவிகள் நகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வந்து சேர முடியும். முன்பெல்லாம் நடந்து பள்ளிக்கு வந்து சேரும் பொழுது காலவிரயம் ஆவதுடன் மனச்சோர்வும் உண்டாகும். பலர் படிப்பை தொடர கூட முடியாமல் கூட இருந்தனர். ஆனால் இப்பொழுது அரசின் திட்டங்களால் பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்தால் போதும் உயர்கல்வி வரை படித்து பயன்பெறும் வகையில் அரசின் திட்டங்கள் கிடைக்கப்பெறுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் உள்ள 10 பள்ளிகளை சேர்ந்த 814 மாணவர்களுக்கும், 1028 மாணவிகளுக்கும் என மொத்தம் 1,842 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன்தங்கம், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கணேஷ்பாண்டியன், செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காஜாமுகைதீன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.