எருமப்பட்டி அருகே பரபரப்புகிணற்றில் மிதந்த பச்சிளங்குழந்தை பிணம்


எருமப்பட்டி அருகே பரபரப்புகிணற்றில் மிதந்த பச்சிளங்குழந்தை பிணம்
x

எருமப்பட்டி அருகே கிணற்றில் மிதந்த பச்சிளங்குழந்தையை போலீசார் மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

நாமக்கல்

எருமப்பட்டி

பச்சிளங்குழந்தை

எருமப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் விஸ்வநாதன், ராஜு, முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு சொந்தமான விவசாய கூட்டு கிணறு உள்ளது. இந்தநிலையில் நேற்று அந்த கிணற்றில் பச்சிளங் குழந்தையின் உடல் மிதப்பதை அந்த வழியாக வந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து எருமப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு எருமப்பட்டி போலீசார் மற்றும் நாமக்கல் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் கிணற்றில் மிதந்த பச்சிளங்குழந்தையின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

மேலும் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை கிணற்றில் வீசிவிட்டு சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எருமப்பட்டி அருகே பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை கிணற்றில் மிதந்தது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story