கர்ப்பிணியை தாக்கியதால் சிசு சாவு - அண்ணி கைது


கர்ப்பிணியை தாக்கியதால் சிசு சாவு - அண்ணி கைது
x

வண்ணாரப்பேட்டையில் கர்ப்பிணியை தாக்கியதால் சிசு உயிரிழந்தால் அண்ணி போலீசார் கைது செய்தனர்.

சென்னை

வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் பிரபாகரன். இவரது மனைவி கவுசல்யா. இவருடைய அண்ணன் விஜயசிம்மன். அவரது மனைவி துர்காபாய் (வயது 35). துர்கா பாய்க்கும், விஜயசிம்மனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அண்ணியான துர்காபாய் மற்றும் உறவினர்கள் 3 பேர் கடந்த மாதம் 17-ந்தேதி கவுசல்யா வீட்டிற்கு வந்து என் குடும்பம் பிரிந்ததற்கு நீ தான் காரணம் என்று கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது கர்ப்பிணியாக இருந்த கவுசல்யாவின் வயிற்றில் தாக்கியதாக கூறப்படுகிறது, இதில் கவுசல்யாவுக்கு வலி ஏற்பட்டு தேனாம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 23-ந்தேதி குறை மாதத்தில் பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் குழந்தை பிறந்து இறந்ததற்கு அண்ணி துர்காபாய் தான் காரணம் எனக்கூறி தண்டையார்பேட்டை போலீசில் கவுசல்யா புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி துர்காபாயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story