பச்சிளம் பெண் குழந்தை ஏரியில் பிணமாக மீட்பு


பச்சிளம் பெண் குழந்தை ஏரியில் பிணமாக மீட்பு
x

ஜெயங்கொண்டம் அருகே பச்சிளம் பெண் குழந்தை ஏரியில் பிணமாக மீட்கப்பட்டது.

அரியலூர்

அழுகிய நிலையில் மீட்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உத்திரக்குடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் பச்சிளம் குழந்தையின் உடல் துணியால் சுற்றப்பட்டு அழுகிய நிலையில் கிடந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் கயல்விழிக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த குழந்தையின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதில் அந்த குழந்தை பிறந்து ஒருவாரமேயான பச்சிளம் பெண் குழந்தை என்பதும், குளத்தில் வீசப்பட்டதால் அந்த குழந்தையின் தலை மற்றும் உடலை மீன்கள் தின்றது தெரியவந்தது. மேலும் குழந்தையை ஏரியில் வீசிச்சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்?, தவறாக பிறந்த குழந்தையா? அல்லது முன் விரோதம் காரணமாக பிறந்த குழந்தையை ஏரியில் போட்டு யாரேனும் கொலை செய்துள்ளனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story