காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்
நாமக்கல் அருகே காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
நாமக்கல்
தமிழ்நாடு முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டத்திலும் பொதுசுகாதாரத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
நாமக்கல் அருகே உள்ள எர்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட நடுப்பட்டி, மரூர்பட்டி உள்ளிட்ட இடங்களில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட பூச்சியல் வல்லுனர் சேகர், டாக்டர் நாகராஜ், செவிலியர் மெர்வின் ஜேஸ், சுகாதார ஆய்வாளர்கள் ராஜ கணபதி, நவின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு டெங்கு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இந்த முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
Related Tags :
Next Story