காய்ச்சல் தடுப்பு முகாம்


காய்ச்சல் தடுப்பு முகாம்
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காக்கழனி, திருக்கண்ணங்குடி ஊராட்சிகளில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் ஒன்றியம் காக்கழனி, திருக்கண்ணங்குடி ஊராட்சிகளில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. காக்கழனி ஊராட்சியில் நடந்த முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் மாரிமுத்து தலைமை தாங்கினார். தேவூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் குமாரராஜா மற்றும் சுகாதாரத்துறையினர் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகள் குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் 240 பேர் கலந்து கொண்டனர். இதேபோல் திருக்கண்ணங்குடி ஊராட்சியில் தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் குமாரராஜா மற்றும் சுகாதாரத்துறையினர் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பரிசோதனை செய்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவக்குமார், செல்வமணி ஊராட்சி செயலாளர்கள் செல்லத்துரை, சிவரஞ்சனி மற்றும் சுகாதார துறை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story