சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் -மாவட்ட நிர்வாகம் தகவல்


சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் -மாவட்ட நிர்வாகம் தகவல்
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் சார்பில் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- ஏப்ரல் 15-ந் தேதி திருநங்கைகள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளை ஊக்குவிக்கும் வகையில் "2023-ம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கைக்கான விருது" வழங்கப்பட உள்ளது. இந்த விருதுடன் ரூ.1 லட்சம் பரிசுத்தொகைக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்த விருது பெற விரும்பும் திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தனது வாழ்க்கையை கட்டமைத்து கொண்டவர்களாக இருக்க வேண்டும். திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து, குறைந்தபட்சம் 5 திருநங்கைகள் தங்களது வாழ்வாதார ஆதரவை பெறவும், கண்ணியமான வாழ்க்கையை நடத்தவும் உதவி புரிந்தவர்களாக இருக்கவேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு திருநங்கை நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. தகுதியுடைய நபர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதள முகவாியில் விண்ணப்பித்து, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதி மாலை 5 மணிக்குள் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story