அக்னிபாத் திட்டத்தின் கீழ்இந்திய விமானப்படையில் பணியாற்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

அக்னிபாத் திட்டத்தின் கீழ்இந்திய விமானப்படையில் பணியாற்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு வீரராக சேர விரும்புபவர்கள், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை,

இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு வீரராக சேர விரும்புபவர்கள், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

அக்னிபாத் திட்டம்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 12-ம் வகுப்பு மற்றும் அதற்கு நிகரான கல்வித்தகுதி உடைய திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

26.12.2002 அன்று அல்லது அதற்குப்பின் பிறந்தவர்கள் மற்றும் 26.06.2006 அன்று அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

இணையதளம் வாயிலாக

உடல்தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 152.5 செ.மீ உயரமும், பெண்கள் 152 செ.மீ உயரமும் இருக்க வேண்டும். தேர்வானது எழுத்துத்தேர்வு, உடல்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளை உடையது. மேலும், விவரங்களுக்கு agnipathvayu.cdac.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொண்டு, விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 31.03.2023-க்குள் மேற்கண்ட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்து தேர்வானது 20.5.2023 முதல் ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story