நிலுவை மனுக்கள் குறித்து தகவல் ஆணையாளர் விசாரணை


நிலுவை மனுக்கள் குறித்து தகவல் ஆணையாளர் விசாரணை
x
தினத்தந்தி 1 March 2023 12:15 AM IST (Updated: 1 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தகவல் அறியும் உரிமை சட்ட நிலுவை மனுக்கள் குறித்து தகவல் ஆணையாளர் விசாரணை நடத்தினார்.

கோயம்புத்தூர்

தமிழ்நாடு தகவல் ஆணையர் தனசேகரன் தலைமையில் ஆய்வு கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற் றது.

இதில் கோவை கலெக்டர் அலுவலக பல்வேறு துறைகளில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக ளுக்கு பதில் அளிக்காமல் உள்ள மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது.

குறிப்பாக சில துறைகளில் நடத்தப்படும் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படாதது, வளர்ச்சி பணிகள் குறித்த விபரங்களை தெரிவிக்காதது குறித்து ஆணையாளர் தனசேகரன் விசாரணை நடத்தினார்.

அதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதே போல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளித்த மனுதாரர்களும் கலந்து கொண்டு தங்களது மனுக்கள் குறித்து விளக்கம் கேட்டனர். அதைத்தொடர்ந்து இன்றும் (புதன்கிழமை) கூட்டம் நடைபெற உள்ளது.


Next Story