போக்குவரத்து நெரிசலை குறைக்க 'சென்னை எல்லை சாலை திட்டம்' - நெடுஞ்சாலைகள் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்
சென்னை எல்லை சாலை திட்டத்திற்காக தற்போது 550 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பின்படி, தென் தமிழகத்தில் இருந்து வரும் சாலைகளை எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களுடனும், அண்டை மாநிலங்களுடனும் இணைத்து அதன் மூலம் வணிகம் மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த சென்னை எல்லை சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எல்லை சாலையானது 132.87 கி.மீ. தூரத்திற்கு 6 வழி இரட்டைப் பாதையாக இருபுறமும் இருவழிச்சாலை சேவைகளுடன் 15,626 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தின் மூலம் சென்னை நகருக்குள் வாகன நெரிசலை குறைப்பதால் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைக்க முடியும் எனவும், இந்த திட்டத்திற்காக தற்போது வரை 550 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.